Sunday, July 8, 2007

பட்ஜெட்டை கூட்டிய குத்துபாடல

மயிலாடுதுறை ஏவிசி காலேஜில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பழனியப்பா கல்லூரி படத்தின் பட்ஜெட் முதலில் 80 லட்சம் என்று முடிவு செய்திருந்தார்களாம். இந்நிலையில் காலேஜில் இடம்பெறும் ஒரு குத்து பாடல் ரிக்கார்டிங் முடிந்து வந்ததாம்.

பாடல் கலகலப்பாக சூப்பராக வந்திருக்கிறதாம். பாடலை கேட்ட படத்தின் தயாரிப்பாளர் பிரபாகரன் இப்போது படத்தின் பட்ஜெட்டை கூட்டியிருக்கிறாராம். பணம் செலவானாலும் பரவாயில்லை பாடலை நன்றாக எடுங்கள் என்று இயக்குனர் பவனிடம் சொல்லிவிட்டாராம்.

1 கோடியே 40 லட்சம் வரை பட்ஜெட்டை உயர்த்திவிட்டாராம் பிரபாகரன். இதனால் சந்தோசமான இயக்குனர் குஷியாக படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறாராம்.

பாவனா செல்போனுக்கு தடா?

துண்டு துக்கடா நட்சத்திரங்கள் கூட இரண்டு, மூன்று செல்போன்களை வைத்துக் கொள்வது இப்போது பேஷனாகிவிட்டது. ஆனால் பாவனாவின் நிலையோ வேறு மாதிரி... இருக்கிற செல்லையும் பிடிங்கி வைத்துக் கொண்டு மொத்தமாக தடா போட்டுவிட்டார் தாய்க்குலம்!

ஏன்? பாவனாவை வைத்து ஏற்கனவே படம் பண்ணின இயக்குனர் ஒருவர் ராத்திரி பகல் பார்க்காமல் போனைப் போட்டு கடலை போட ஆரம்பித்துவிடுகிறாராம்.

பாவனாவும் பதிலுக்கு கடலை போட பயந்துபோய் இப்படியொரு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் பாவனாவை பெத்தவர்கள்! இப்போது சித்திரம் பேசாதபடி பாதுகாப்பு வளையத்தையும் அதிகப்படுத்திவிட்டார்கள

Saturday, July 7, 2007

காமெடி ஹீரோவாக பிரகாஷ்ராஜ்

அர்ஜுன் நடித்த சூர்ய பார்வை படத்தை இயக்கியவர் மனோஜ்குமார். இவர் மாதவன், பாவனா நடிக்கும் ஆர்யா படத்தை தயாரிக்கிறார்.

இப்படம் ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது. ம்னோஜ்குமார் அடுத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். படத்தின் பெயர் பீஸ்கட்டை ராமசாமி.

நகைச்சுவையை மையமாக கொண்ட இப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஹீரோவாக நடிக்கப் போகிறார். அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறாராம். மின்சார வாரியத்தில் வேலை செய்யும் ஊழியர் அவர் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை காமெடியாக சொல்லப் போகிறாராம் இயக்குனர

"மஞ்சள் வெயில்"லில் பாடல் பாடியுள்ளார் சந்தியா

பரத்வாஜ் இசையில் மஞ்சல் வெயில் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் நடிகை சந்தியா.

தமிழகம் சினிமாவைக் கண்ட நாள் முதலாகவே கதாநாயகிகள் பாடல்கள் பாடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

வெப்துனியா

கே.அசுவத்தாமா, டி.ஏ.பெரியநாயகி, யு.ஆர்.ஜீவரத்தினம், டி.சூர்யகுமாரி, டி.ஆர்.ராஜகுமாரி, என்.சி.வசந்தகோகிலம், கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலெட்சுமி, எஸ்.வரலெட்சுமி, டி.ஏ.மதுரம், பானுமதி, ஸ்ரீவித்யா, ஜெயலலிதா, வசுந்தராதாஸ், ஷாலினி போன்ற தமிழ் சினிமாவில் பாடி நடித்த கதாநாயகிகள் வரிசையில் "செல்லக்குயில்" சந்தியாவும் இடம் பிடித்துள்ளார்.

நல்ல குரல்வளம் கொண்ட சந்தியாவை இசையமைப்பாளர் பரத்வாஜ் தனது இசையில், ஹாசினி சினிமாஸ் சார்பில் சையத்.ஐ. தயாரிப்பில் தயாராகிவரும் "மஞ்சள் வெயில்" படத்திற்காக பாட வைத்தார். இவர்தான் நடிகை ஷாலினியையும் "அமர்க்களம்" படத்தில் பாடவைத்து அவரது இனிய குரலை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பாடும் கதாநாயகிகளின் ஒட்டுமொத்த பட்டியலில் இருவரை (ஷாலினி, சந்தியா) பாட வைத்த பெருமை இசையமைப்பாளர் பரத்வாஜை சேரும்.

"மஞ்சள் வெயில்" படத்தில் சந்தியா பாடியுள்ள பாடல் வெஸ்டர்ன் இசை சார்ந்த பாடலாகும். இப்பாடல் மிகப்பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ளது. சந்தியாவின் செல்லக்குரலில் பதிவான இப்பாடலை "வித்தகக் கவிஞர்" பா.விஜய் பளிச்சிடும் வரிகளால் அலங்கரித்திருக்கிறார். அவ்வரிகள்...

பல்லவி

ஆண்: கோல்ட் கோட்டட் பூ நீயா?
கலக்கலா...
ஐஸ்போட்ட தீ நீயா?
கலக்கலா...
அசையுது ஒரு ட்வின்டவர் கவிதை மெதுவா
உறையுது மனம் சிரபுஞ்சி மழையாய் பொதுவா
என் ஆசையும் நீயே
ஆ நீயே ஆ நீயே தான்
என் ஆக்ஜிசன்.. நீயே
ஆ நீயே! ஆ நீயே தான்!
கமான் கமான் கமான் கமான் பேபி
கலக்கலா...
Lets கலக்கலா...

பெண்: ரெயின் கோட்டட் மழை நீயா?
கலக்கலா...
ரிக்கி மார்டீன் இசை நீயா?
கலக்கலா...

சரணம்

ஆண்: வாட்டர் பெட்டொன்ற மெல்ல
வாக்கிங் போகின்றதென்ன...
ஹீட்டர் இல்லாமல்
மீட்டர் இல்லாமல்
உஷ்ணம் உதட்டோரம் தெரிகிறதே
பெண்: முளை நியூரான்கள் மெல்ல
முட் அவுட் ஆச்சி என்ன?
AM - ஆனாலும் PM-ஆனாலும்
உந்தன் ஆசைகள் கொல்கிறதே
ஆண்: இதயத்ததின் அருகிலே நின்று
இன்சாட் ராக்கெட்டும் இன்று
ஜிவ்வென்று பறக்கிறதே
லவ்வென்று குதிக்கறிதே
பெண்: சத்தங்களகேட்கிற பீச்சில்
முத்தங்கள் பூக்கின்ற பேச்சில்
இருதயம் நுழைகிறதே
இறகுகள் இணைகிறதே.
கமான் கமான் கமான் கமான் பேபி
கலக்கலா

மனம் மாறிய நடிகை

சென்னை 28 படத்தில் நடித்த இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி நம் பக்கத்து வீட்டு பெண்ணைப் போல் பாந்தமாக இருக்கிறார் என்று படம் பார்த்த எல்லோரும் பாராட்டினார்கள்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு ஹோம்லியான நடிகை கிடைத்துவிட்டார் என்று பார்த்தால் இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை அவர் மனசு மாறி தொடர்ந்து நடிக்கப் போகிறேன் என்று சொல்லி வருகிறார்.

அதுவும் இல்லாமல் ஒரு ஃபோட்டோ செஷன் எடுத்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை தேடி வருகிறா

எடிட்டரை பாடுபடுத்தும் இயக்குனர்

ஜாக்குவார் தங்கம் தன் மகனை கதாநாயகனாக வைத்து சூர்யா என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார். சுபாஷ் என்பவர் இப்படத்தின் எடிட்டராக இருக்கிறார்.

அவருக்கும் இயக்குனருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏதோ பிரச்சினையாம். இதை மனதில் வைத்துக் கொண்டு ஜாக்குவார் தங்கம் எடிட்டரை அவமதிப்பதைப் போல் நடந்து கொண்டாராம்.

எடிட்டிங் அறையில் உட்கார்ந்து அவர் செய்யும் அலம்பை பொறுக்க முடியாத எடிட்டர் என்னால் இனிமேல் இந்த படத்தில் வேலை செய்ய முடியாது என்று எடிட் செய்தவற்றை லேபில் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டாராம்.

கையோடு எடிட்டர் அசோஸியேசனில் ஜாக்குவார் தங்கம் மீது புகாரும் கொடுத்து விட்டாராம்.